சென்னை:
8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சிஎஸ்கே.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணியில் ஹர்பஜன் சிங்குக்குப் பதிலாக சான்ட்னெர் களமிறங்கினார். வாட்சன், அம்பதி ராயுடு தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பந்துவீச்சில் ஆரம்பத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினர். குல்கர்னி முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
2-வது ஓவரை ஜாப்ரா அர்சர் வீசினார். இந்த ஓவரில் முதல் ஐந்து பந்தில் ரன்ஏதும் அடிக்காத ராயுடு கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார்.
அடுத்து வாட்சனுன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். குல்கரின் வீசிய 3-&து ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடித்தார். பென் ஸ்டோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் சிக்ஸர் அடித்த வாட்சன், 4&-வது பந்தில் ஆட்டமிழந்தார். 13 பந்தில் 13 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து வந்த கேதர் ஜாதவ் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார். ஆனால் குல்கர்னி வீசிய 5-&வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
கேதர் ஜாதவ் ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 4.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்தது.
4-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் டோனி களமிறங்கினார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
சிஎஸ்கே 9.3 ஓவரில் 50 ரன்களைக் கடந்தது.
12-&வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் ரெய்னா இரண்டு பவுண்டரிகளை அடித்தார். 14-&வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் 3-&வது பந்தில் ரன்அவுட்டில் இருந்து தப்பிய ரெய்னா, 4-வது பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 32 பந்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்தார். ரெய்னா – டோனி ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.
5-வது விக்கெட்டுக்கு டோனியுடன் பிராவோ களமிறங்கினார். 15-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் பிராவோ இரண்டு பவுண்டரிகள் அடித்தார். 15.1 ஓவரில் சிஎஸ்கே 100 ரன்னைத் தொட்டது.
ஜாப்ரா வீசிய 17-வது ஓவரில் எம்எஸ் டோனி ஒரு பவுண்டரி அடித்தார். 18-வது ஓவரை குல்கர்னி வீசினார். இந்த ஓவரில் ஃப்ரீஹிட் வாய்ப்பை பயன்படுத்தி டோனி சிக்ஸ்சர் அடித்தார்.
ஐந்தாவது பந்தில் பிராவோ பவுண்டரி அடிக்க, கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 24 ரன்கள் கிடைத்ததன.
19-வது ஓவரை ஜாப்ரா ஆர்சர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டோனி, 39 பந்தில் அரை சதம் அடித்தார். 3-வது பந்தில் பிராவோ ஆட்டமிழந்தார்.
அவர் 16 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். டோனி -&பிராவோ ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. 6-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். 19-வது ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 8 ரன்களே கிடைத்தது.
கடைசி ஓவரை உனத்கட் வீசினார். முதல் பந்தில் டோனி ஒரு ரன் அடித்தார். 2-வது பந்தை ஜடேஜா சிக்சருக்கு தூக்கினார். சிஎஸ்கே 150 ரன்னைத் தாண்டியது. அடுத்த பந்தில் 1 ரன் அடித்தார். 4-வது பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். ஐந்தாவது பந்திலும் சிக்ஸர் அடித்தார்.
கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எட்டியது. கடைசி ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 4 சிக்சர்களுடன் 28 ரன்கள் கிடைத்தன.
டோனி விளாசல்
டோனி 46 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும், பட்லரும் களம் இளங்கினர். சகார் வீசிய முதல் ஓவர் இரண்டாவது பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக 3 ஓவரின் கடைசி பந்தில் சாம்சன் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக பட்லர் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தாகூர் பந்து வீச்சில் ப்ராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
திரிபாதியும், ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து அணியின் ரன்களை உயர்த்தினர். இதில் திரிபாதி ஆட்டத்தின் 10 வது ஓவரில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தாகிர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் ஆட்டத்தின் 14 வது ஓவரில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக 17வது ஓவரில் கவுதம் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து களத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ் மற்றும் அர்சார் இருவரும் ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி
இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும், பட்லரும் களம் இளங்கினர். சகார் வீசிய முதல் ஓவர் இரண்டாவது பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக 3 ஓவரின் கடைசி பந்தில் சாம்சன் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக பட்லர் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தாகூர் பந்து வீச்சில் ப்ராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
திரிபாதியும், ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து அணியின் ரன்களை உயர்த்தினர். இதில் திரிபாதி ஆட்டத்தின் 10 வது ஓவரில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தாகிர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் ஆட்டத்தின் 14 வது ஓவரில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக 17வது ஓவரில் கவுதம் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து களத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ் மற்றும் அர்சார் இருவரும் ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கி தொடர்ந்து ரன்களை குவிக்க துவங்கினர்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகள் எஞ்சியிருக்க 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் 19.1 ஓவரில் பிராவோ வீசிய பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஆட்டத்தின் 19.5 ஓவரில் பிராவோ வீசிய பந்தில் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் கோபால் பெவிலியன் திரும்பினார்.
முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தாகூர், தாஹிர், சாஹர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 6 பந்துகள் எஞ்சியிருக்க 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் 19.1 ஓவரில் பிராவோ வீசிய பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆட்டத்தின் 19.5 ஓவரில் பிராவோ வீசிய பந்தில் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் கோபால் பெவிலியன் திரும்பினார்.
முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக தாகூர், தாஹிர், சாஹர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
விளையாடிய 3 போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.