பெங்களூரு: நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே, பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
பந்துவீச்சில் இன்று சொதப்பி விட்டோம். கடைசி கட்டத்தில் ஷெப்பர்ட் சிறப்பாக விளையாடினார். எல்லா பேட்டர்களும் யார்க்கரில் விளையாடவில்லை. நவீன யுகத்தில் பேட்டர்கள் பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் எங்கள் பெரும்பாலான பேட்டர்கள் அதை விளையாட வசதியாக இல்லை. ஜடேஜா சிறப்பாக விளையாடுகிறார். பேட்டிங் என்பது நாங்கள் சற்று பின்தங்கிய ஒரு பகுதியாகும். ஆனால் இன்று ஒரு துறையாக பேட்டிங் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன் என தெரிவித்தார்.

ஐபிஎல் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய சென்னை சூப்பர் கிங் அணி கடந்த இரண்டு வருடங்களாக தோல்வியை சந்தித்து வருகிறது. 2024 மற்றும் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு போட்டியில் கூட ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றி பெறவில்லை. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தால் ஆர்சிபி-யின் பிளே ஆப் கனவை தகர்த்திருக்க முடியும். ஆனால், ஆனால் கடைசி பந்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்து, போட்டியில் இருந்து வெளியேறும் நிலை உருவானது.
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஆப்பிற்கு தகுதி பெற வாய்ப்பு இருந்த நிலையில், அதனை தட்டிச்சென்றது ஆர்சிபி . அதற்கு பழி வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஒரு வாய்ப்பு இருந்த போதிலும் தவற விட்டுள்ளனர். ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது சிஎஸ்கே அணி. கடந்த சீசனிலாவது கடைசி லீக் ஆட்டம் வரை தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்திருந்தது சிஎஸ்கே அணி. ஆனால் இம்முறை ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறி உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி இதுபோன்ற நெருக்கடியான நிலையை சந்திப்பது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்தமாக 18 சீசன்களில் சிஎஸ்கே அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 4-வது முறையாகும். 2020, 2022, 2024-ம் ஆண்டுகளிலும் அந்த அணி லீக் சுற்றை கடக்கவில்லை. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி தனது கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிக்கான தாகத்துடன் விளையாடாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இங்கு விளையாடி உள்ள 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியை சந்தித்ததால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பறிகொடுத்துள்ளது. தற்போது அர்சிபி அணியுடனான போட்டியிலும் தோல்வி அடைந்து, தனது வாய்ப்பை நழுவ விட்டது.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, “நான் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, தேவையான பந்து மற்றும் ரன்கள் இருந்த போதே அழுத்தத்தைக் குறைக்க இன்னும் சில ஷாட்களை அடித்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை. இந்த தோல்விக்ன பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் நல்ல தொடக்கத்தைப் பெற்றனர், இடையில் நாங்கள் அதை பின்னுக்குத் தள்ளினோம், ஆனால் ரொமாரியோ ஷெப்பர்ட் அற்புதமாக விளையாடினார். பந்து வீச்சாளர்கள் என்ன பந்து வீசினாலும், அவரால் அதிகபட்ச ரன்களைப் பெற முடிந்தது.
நாம் அதிக யார்க்கர்களைப் பயிற்சி செய்ய வேண்டும். பெரும்பாலும், பேட்டர்கள் ரன்கள் அடிக்க தொடங்கும்போது, நீங்கள் யார்க்கர்களை நம்பியிருக்க வேண்டும். எனவே நீங்கள் ஒரு சரியான யார்க்கரைத் தேடுகிறீர்கள் என்றால், அது நடக்கவில்லை என்றால், ஒரு குறைந்த ஃபுல் டாஸ் போடுவது சிறந்த விஷயம். அடிக்க மிகவும் கடினமான பந்துகளில் இதுவும் ஒன்று. பதிரானா போன்ற ஒருவர், யார்க்கர் நடக்கவில்லை என்றால், அவருக்கு வேகம் உள்ளது. அவர் பவுன்சரை வீச முடியும் மற்றும் பேட்டர் யூகிக்க வைக்க முடியும். சில நேரங்களில் அவர் யார்க்கர்களைத் தேடுகிறார் என்றால், பேட்டர்கள் அதை அடிக்க விரும்புகிறார்கள், அவர் தவறவிட்டால், பேட்டர்கள் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதைப் பயன்படுத்தலாம், ஆனால் எல்லா பேட்டர்களும் ஸ்கூப் விளையாட வசதியாக இல்லை. அது இயல்பாக வந்தால், நிச்சயமாக முடியும். இல்லையென்றால், அது கடினமாகிவிடும் என்றார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இதில் ஜேக்கப் பெத்தேல் 55 ரன்களிலும், விராட் கோலி 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 17 ரன்களில் வெளியேறினார். பின்பு ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியின் ஷெப்பர்ட் 53 ரன்களுடன் களத்தில் இருந்தார். சென்னை அணியில் அதிகபட்சமாக மதீஷா பதிரானா 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 214 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே – ஷேக் ரஷித் களமிறங்கினர். ஷேக் ரஷித் 11 ரன்னிலும், அடுத்து வந்த சாம் கரன் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஆயுஷ் மாத்ரேவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆயுஷ் மாத்ரே 94 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிவேன் பிரேவிஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜடேஜா 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.