
சென்னை: வரும் 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசன் ஏலத்தில், சென்னை அணியில் தோனி, மீண்டும் தக்கவைக்கப்பட மாட்டார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
தற்போது 39 வயதாகும் தோனி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு, அணியில் தக்கவைக்கப்படும் வகையில், அதிக தொகை கொடுத்து அணியில் தக்கவைக்கப்படமாட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளதாவது, “அடுத்த சீசனுக்கான ஏலம் பெரியளவில் நடைபெறும் நிலையில், தோனி, சென்னை அணியில் தக்கவைக்கப்படமாட்டார் என்றே எண்ணுகிறேன். அப்படி, தக்கவைக்கப்பட்டால் அவருக்கு ரூ.15 கோடி கொடுக்க வேண்டும்.
எனவே, சென்னை அணி நிர்வாகம் அதை விரும்பாது என்றே கருதுகிறேன். அதேசமயம், தோனியை விடுவித்துவிட்டு, ‘ரைட் டு மேட்ச் கார்டு’ முறையில், தோனியை குறைந்த விலைக்கு சென்னை அணி மீண்டும் வாங்கிக் கொள்ளும் வாய்ப்புண்டு.
தோனியை வரும் 2021 சீசனுக்கு மட்டுமே தக்கவைத்தால், அதன்பிறகு, அடுத்த சீசனுக்கு மற்றொரு வீரரை ரூ.15 கோடிக்கு தேட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, ‘ரைட் டு மேட்ச் கார்டு’ மூலம் குறைந்த விலைக்கு தோனியை ஏலம் எடுத்து, மீதமுள்ள தொகையில், தேவையான வேறு வீரர்கள் ஏலம் எடுக்கலாம்” என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
[youtube-feed feed=1]