கிரிப்டோ நாணயத்தை தனது நாட்டின் அதிகாரபூர்வ நாணயமாக அறிவித்தது எல் சல்வடார்.

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடார் உலகிலேயே கிரிப்டோ நாணயத்தை அனுமதிக்கும் முதல் நாடாக மாறியிருக்கிறது.

உலகிலேயே இந்த ஒரே நாட்டில் மட்டுமே மெய் நிகர் நாணயம் என்று சொல்லப்படும் கிரிப்டோ கரன்சிகள் அதிகாரப்பூர்வ கரன்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க டாலருக்காக செலவழிக்கப்படும் கமிஷன் தொகை ரூ. 3000 கோடி ஆண்டு தோறும் மிச்சப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 64,000 டாலரை எட்டிய ஒரு பிட் காயினின் மதிப்பு மே மாதம் 30,000 டாலராக சரிந்தது ஒரே மாதத்தில் 34000 டாலர்களை சரிவைச் சந்தித்த பிட் காயினை தங்கள் நாட்டு அதிகாரப்பூர்வ கரன்சியாக அறிவித்திருப்பாதால், தாங்கள் நாட்டின் ரூபாயின் மதிப்பு உலக வர்த்தகத்தில் ஒரே நாளில் சரிவையோ, உச்சத்தையோ சந்திக்கக் கூடும் என்பதால், இது மிகவும் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிட் காயின் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளும் மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2300 க்கு நிகரான பிட் காயின்கள் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும், “எந்த ஒரு புதிய அறிவிப்புக்கும் வரவேற்பு என்பது நிச்சயமாக இருக்காது என்பதால், இந்த மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதைப் போகபோகத்தான் பமக்கள் உணர்ந்து கொள்வார்கள்” என்று கடந்த 40 ஆண்டுகளாக எதேச்சதிகார அரசை நடத்துவதாக குற்றம் சாட்டப்படும் அந்நாட்டு அதிபர் நயிப் புக்கில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]