நெட்டிசன்:

பிரபல கவிஞரும், திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன், “பத்திரிகை டாட் காம் இணைய தளம் ‘ சுஜாதா விருது நிகழ்ச்சிக்கு பிரபஞ்சன் வராதது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை’ என நான் குறிப்பிட்டதை வக்கிரமாக திரிக்க முயன்றிருந்தார்கள்.

போலிச் சர்ச்சைகளை உருவாக்கி அதை உண்டு உயிர்வாழ விரும்பும் இது போன்ற இணைய தளங்கள் இதுபோன்ற வக்கிரத்தை வெளிப்படுத்துகின்றன” என்று தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது உயிர்மை பதிப்பகம் சார்பாக, சுஜாதா விருது அளிக்கும் விழாவை நேற்று முன்தினம் நடத்தினார் மனுஷ்யபுத்திரன். நிகழ்ச்சிக்கு தலைமையேற்பதாக இருந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் வரவில்லை. இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கிறார்.

அந்த பதிவில், “தலைமை ஏற்பதாக இருந்த பிரபஞ்சன் ஏன் வரவில்லை என்பது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து கவிஞர் லஷ்மி சரவணக்குமார், “மனுஷ்யபுத்திரன் மனநோயாளி, நாய்க்கு வெறிபிடித்தால் யாரையாவது பார்த்து குறைத்துக்கொண்டே இருக்கும். அது போல, எப்போதும் தான் டிரண்டில் இருக்க வேண்டும் என்பதால் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார் அவரது பேச்சு, எழுத்தை புறம்தள்ளி கடந்து செல்வதே புத்திசாலித்தனம்” என்று நம்மிடம் தெரிவித்தார்.

மனுஷ்யபுத்திரன்

மேலும் சில படைப்பாளிகள், “தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் பிரபஞ்சனும் ஒருவர். அவர், நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதற்காக தன்னிலை அறியாதவர் என்பது போல மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டு இழிவு படுத்தியிருக்கிறார். நல்ல மனநிலை, மற்றும் உடல் நிலையுடன் இருக்கும் பிரபஞ்சனை,  “தான் ஏன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை” என்று எழுவது நாகரீகமல்ல.

அதே பதிவில், “நான் வன்முறைக்கு ஆளாக்கபடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனது நியாயங்களுக்காக நிற்பவர்களை  நன்றியுடன்   எங்களை அன்பினால் வெல்லலாம். அவதுறுகளால் வெறுப்பினால் ஒருபோதும் வெல்ல முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார் மனுஷ்யபுத்திரன்.

இவர் மட்டும் பிறரை அடுத்தவரை வன்முறைக்கு ஆளாக்கலாமா.. அவதூறு செய்யலாமா” என்றும் படைப்பாளிகள் பலர் ஆதங்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், இன்று தனது முகநூல் பதிவில், சரவணக்குமாருக்கு பதில் அளித்துள்ள மனுஷ்யபுத்திரன், :பத்திரிகை டாட் காம் இணையதளத்தை “வக்கிரம் பிடித்தது” என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கேள்வி – பதில் வடிவிலான அவரது இன்றைய பதிவு:

“டியர் மனுஷ்
எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் ’’ மனுஷ்ய புத்திரன் ஒரு மனநோயாளி.. நாய்க்கு வெறிபிடித்தால் யாரையாவது பார்த்து குரைத்துக்கொண்டே இருக்கும். ’’என்று கூறியிருக்கிறாரே? இது போன்ற விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

சந்திர குமார்
திருமங்கலம்

இதை விமர்சனம் என்று சொல்வதிலிருந்தே விமர்சனம் பற்றிய உங்கள் பார்வையை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விமர்சனத்தை சொல்லியிருப்பவர் தமிழில் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர். இவரது முதல் நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர் மிகவும் விரும்பி கேட்டதால் அவரது சிறுகதைத் தொகுப்பையும் உயிர்மை வெளியிட்டது. சுஜாதா விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

உயிர்மையில் வெளியிட்ட அவரது சிறுகதை ஒன்றிற்காக மதுரையை சேர்ந்த நாடக கலைஞர்கள் கொதித்து எழுந்து உயிர்மையை தொடர்புகொண்டார்கள். அது நாடக கலைஞர் ஒருவருடைய அந்தரங்கக் கதையை அப்படியே பெயர் ஊருடன் எழுதி அவமானப்படுத்தியிருந்தார். அந்தக் கதாபாத்திரம் ஒரு மனிதரைபற்றிய நேரடிக் கதை என்று தெரியாமல் நானும் வெளியிட்டுவிட்டேன். பிறகு அந்த நாடக கலைஞர்களை சமாதானப்படுத்தி ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் மேற்படி நபரிடம் பெற்று வெளியிட்டேன். நான் கேட்டுகொண்டதன் பெயரில் அன்று மேற்படி நபர் கைகால் முறியாமல் தப்பினார்.

ஆனால் இந்த நபர் என்னை ஏன் வசைபாடுகிறார் என்று எனக்கு இதுவரை தெரிந்ததே இல்லை. இரவு 11 மணிக்கு அவருடைய எத்தனையாவது ரவுண்டில் இத்தகைய வசைகளை ஆரம்பிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. என்னை அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெறுக்கும் சிலரிடம் கிடைக்கும் அற்ப தாயங்களுக்காக அவர் இதைச் செய்கிறார் என்பதும் எனக்குத் தெரியும்.

சமீபத்தில் இந்த நபரைபோலவே என் மீது அவதூறுகளைப் பரப்பிய இன்னொரு நபரை பொறுக்கி என்று நான் சொன்னதை வைத்துக்கொண்டு ‘மனுஷ்ய மனுஷ்ய புத்திரன் இப்படி பேசலாமா?’ என்று ஆளாளுக்கு அலறினார்கள். ஆனால் அந்த நபருக்காக பரிந்து பேசியவர்கள் என்னைப்பற்றி அவர் செய்த அவதூறுகளைப் பற்றி எந்தக் கவலையும் படாதது மட்டுமல்ல, அவரை செல்லம் கொஞ்சவும் செய்தார்கள்.

என் இனிய நண்பர் மதுரை அருணாச்சலம். அவருடைய பதிப்பக துவக்க விழாவிற்கு என்னையும் அழைத்து விட்டு அந்த நபரை வரவேற்புரைக்கு அழைத்திருந்தார். அந்த நபர் வந்தால் நான் வர மாட்டேன் என்று கூறிவிட்டேன். கடைசியில் அந்த நபர் அந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனல் அருணாச்சலத்திற்க்கு என்னை தனிப்ப்பட்ட முறையில் இவ்வளவு ஆபாசமாக தாக்குகிற ஒரு நபரை எனது நிழச்சிக்கு அழைக்கக் கூடாது என்ற குறைந்த பட்ச உறுத்தல் கூட இல்லை. எந்த மதிப்பீடும் இல்லாத காலத்தின் பிரச்சினைகள் இவை

இப்போது நான் லஷ்மி சரவணக்குமாரின் ‘ கருத்து’ க்கு சொல்லக் கூடிய பதில் ’’ செருப்பால் அடிப்பேன்’’ என்பதுதான். நான் இதைச் சொன்னதும் உடனே நான்கு அறப்போராளிகள் கிளம்பி வந்து என்னைத் தாக்குவார்கள். லஷ்மி சரவணக்குமாரிடம் நெருக்கமாக இருக்கும் எனது இனிய நண்பர்கள் ‘’ அவன் தான் சல்லிப் பயல் .. நீங்க ஏன் சார் இப்படி பேசறீங்க’’ என்று என்னை சமாதானப்படுத்துவார்கள். அனால் அந்த நபர் என்னைப் பற்றி என்ன சொன்னர் என்பது அவர்களுக்கு முக்கியமே அல்ல.

மேலும் அது எந்த விதத்திலும் அவர்களுக்கு அந்த நபருக்குமான உறவைப் பாதிக்காது. என்னை நேரடியாக தாக்குகிறவர்களைவிட இந்த தாக்குதல்களில் ரகசிய இன்பம் அடைந்துகொண்டே வருத்தப்படுகிற பாவனை செய்பவர்கள் ஆபத்தானவர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட இணைய தளம் ‘ சுஜாதா விருது நிகழ்ச்சிக்கு பிரபஞ்சன் வராதது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை’ என நான் குறிப்பிட்டதை வக்கிரமாக திரிக்க முயன்றிருந்தார்கள்.

சில தினங்களுக்கு முன்பு பிபஞ்சனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பிரபஞ்சன் நிகழ்சிகளுக்கு ஒத்துக்கொண்டு வராமல் இருப்பது தொடபாக பவா. செல்லத்துரை மிக விரிவாக பேசினார். ஒருவரை நிகழ்ச்சிக்கு தலைமையேற்க அழைப்பது அவர்மீதான பேரன்பினாலும் பெரு மதிப்பினாலுமே. வராமல் போவதற்கு ஆயிரம் நியாயமான காரணஙக்ள் இருக்கலாம். ஆனால் ஒரு சிறு தகவல் தெரிவிக்க முடியும். அது பரஸ்பர மரியாதை சார்ந்ததுதானே. மேலும் சமீபத்தில் உயிர்மைக்கு பிரபஞ்சன் இதைச் செய்வது இரண்டாம் முறை. அந்த வருத்தத்தையே அதில் பதிவு செய்திருந்தேன்.

ஆனால் போலிச் சர்ச்சைகளை உருவாக்கி அதை உண்டு உயிர்வாழ விரும்பும் இது போன்ற இணைய தளங்கள் இதுபோன்ற வக்கிரத்தை வெளிப்படுத்துகின்றன.

பிரபஞ்சன் மீது நான் காட்டுகிற அன்பும் மரியாதையும் இதுபோன்ற போலிகளிடம் நான் நிரூபிக்க வேண்டியதில்லை.அதற்காக தனயர்கள் தந்தையர்களிடம் சண்டையிடகூடாதா என்ன?
லஷ்மி சரவணக்குமார் போன்ற இலக்கிய முகமூடியணிந்த பொறுக்கிகளை கொஞ்சுகிறவர்கள் என்னிடம் இதுதொடர்பாக எதையும் கேட்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன்

‘’ பொறுக்கிகளை பொறுக்கி என்றுதான் சொல்ல முடியும்’’ – இவ்வாறு மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார்.