புதுடெல்லி:
கண்ணி வெடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புல்லட் ப்ரூப் வாகனங்களையும் மற்றும் சிறு பஸ்களையும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது ஏராளமான சிஆர்பிஎஃப் வீரர்கள் கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழக்கின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.
கண்ணிவெடியிலிருந்து வீரர்களை பாதுகாக்கும் சிறப்பு வாகனங்களும், 30 பேர் மட்டுமே அமர்ந்து ரோந்து செல்லக்கூடிய பஸ்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், வெடிகுண்டு தடுப்புப் படையினரை காஷ்மீரில் அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பின் படை வீரர்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிஆர்பிஎஃப் டைரக்டர் ஜெனரல் ஆர்ஆர் பட்நாகர் தெரிவித்துள்ளார்.