ஸ்ரீநகர்
சி ஆர் ;பி எஃப் வீரர் முனிர் அகமது தாம் பாகிஸ்தான் பெண்ணை அனுமதி பெற்ற பிறகே மணந்ததாக தெரிவித்துள்ளாஅர்

காஷ்மீரில் உள்ள கரோட்டா பகுதியை சேர்ந்த முனிர் அகமது சி.ஆர்.பி.எப். படையில் (மத்திய ரிசர்வ் காவல் படை) வீரராக பணியாற்றி வந்தார்., பாகிஸ்தானை சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணுக்கும் இவருக்கும் ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்டு இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் கடந்த ஆண்டு் வீடியோ கால் அழைப்பு மூலம் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த மெனலின் விசா மார்ச் 22-ந் தேதியோடு முடிவடைந்த நிலையில், அவர் தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருந்தார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டதால், அட்டாரி- வாகா எல்லை வழியாக மேனல் கான் பாகிஸ்தானுக்கு நாடு கடத்த திட்டமிடப்பட்டது.
ஆயினும், அவரது நாடு கடத்தலுக்கு உயர்நீதிமன்ற்தடை விதித்ததால் அவர் தற்போது முனிர் அகமதுவின் வீட்டில் தங்கி உள்ளார். பாகிஸ்தான் பெண்ணை திரூமணம் செய்து விசாககாலம் முடிந்த பிறகும் நாட்டில் தங்க வைத்ததால் முனிர் அகமது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து முனிர் அகமது,
“முதலில் ஊடக அறிக்கைகள் மூலம் எனது பணிநீக்கம் குறித்து எனக்கு தெரியவந்தது. பணிநீக்கம் குறித்து மத்திய ரிசர்வ் காவல் படையிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் நான் மத்திய ரிசர்வ் காவல் படை தலைமையகத்தில் பாகிஸ்தானிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றுள்ளேன்.’
ஆட்சேபனையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. விதிகளின்படி வெளிநாட்டவருடனான எனது திருமணம் குறித்து அரசுக்கு தெரிவித்து ஏற்கனவே சம்பிரதாயங்களை முடித்து விட்டேன். நான் பணியமர்த்தப்பட்ட எனது 72-வது பட்டாலியனுக்கு திருமண படங்கள், திருமண ஆவணங்கள் மற்றும் திருமண சான்றிதழை சமர்ப்பித்தேன்.
எனது மனைவிக்கு கடந்த மார்ச் மாதத்திலேயே நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பித்தோம். நேர்காணல் உள்ளிட்ட தேவையான சம்பிரதாயங்களை நாங்கள் முடித்துள்ளோம். எனது மனைவியின் நாடு கடத்தலுக்கு லடாக் ஐகோர்ட்டு நிவாரணம் வழங்கியது. எனது பணிநீக்கத்தை எதிர்த்து சட்ட நடவடிக்கையாக கோர்ட்டை நாடப்போகிறேன்”
என்று விளக்கம் அளித்துள்ளார்.