கொல்கத்தா:
பயிர் காப்பீடு அரசே செலுத்தும் என்று மேற்கு வங்க விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புத்தாண்டு சலுகையாக அறிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, விவசாயிகளுக்கு புத்தாண்டு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அப்போது மேற்கு வங்காள அரசு விவசாயிகளுக்கு என்றும் துணையாக இருக்கும் என்றவர் 2 புதிய திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக கூறினார்.
அதன்படி, விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு தொகையை மாநில அரசே செலுத்தும் என்றும், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
18 முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் இறந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றார்.
மேலும், முத்தலாக் விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதில் உரிய கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் கட்சி எம்.பியான சுதீப் பந்தோபத்யாய இதுதொடர்பாக ஏற்கனவே பேசியுள்ளார் என்பதையும் நினைவு கூறினார்.