அலகாபாத்: உத்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் கிரிமினல்களின் ராஜ்ஜியம் தலைவிரித்து ஆடுவதாக குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி.
அவர் கூறியுள்ளதாவது, “உத்திரப்பிரதேச மாநிலத்தில் கிரிமினல்கள் மிகவும் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். அவர்கள் தாங்கள் நினைத்ததை செய்து கொள்கிறார்கள். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில்?
மாநில அரசு கிரிமினல்களிடம் சரணடைந்துவிட்டதா? கிரிமினல்களின் குற்றச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், மாநில அரசின் கண்களுக்கும், காதுகளுக்கும் எதுவுமே தெரிவதில்லை. இதனால், கிரிமினல்கள் அதிக உற்சாகம் பெற்று சுதந்திரமாக உலவுகின்றனர்” என்றுள்ளார் பிரியங்கா.
இதே குற்றச்சாட்டை இதற்கு முன்னர் சமாஜ்வாடி கட்சியும் சுமத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.