டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்2023 போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத் தொகை விவரங்களை ஐசிசிஐ வெளியிட்டு உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியானது நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 5ந்தேதி தொடங்கி உள்ள முதல்போட்டி, குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் பங்கேற்கும் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்த போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் களம் காணும்.
இந்த நிலையில், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசு தொகையை ஐசிசிஐ அறிவித்து உள்ளது. அதன்படி, மொத்த பரிசுத்தொகை தோராயமாக ரூ.84 கோடி ஆகும். இதில், வெற்றிபெறும் அணிக்கு ரூ.33 கோடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33.18 கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2வது பிடிக்கும் அணிக்கு ரூ.16.59 கோடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரையிறுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்கும் அணிகளுக்கு தலா ரூ.6.63 கோடி பரிசாக அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.17.5 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.6.64 கோடியும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கும் தலா ரூ.83 லட்சம் வழங்கப்படும் என்று ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு லீக் போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு ரூ.3.18 லட்சம் வழங்கப்படும் என்று ஐசிசி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி அறிவித்துள்ள பரிசுத்தொகை விவரம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.