பிரிஸ்டல்:

ங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

நேற்று மாலை பிரிஸ்டலில் பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே நடைபெற இருந்த போட்டி தொர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டடது.

நேற்றைய ஆட்டம் பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆட்டம் தொடங்கு வதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் மைதான பிட்ச்கள் மழையால் நனைந்ததால், பிட்சுகளை பணியாளர்கள் பாதுகாப்பாக மூடினர்.

இடையே சிறிது நேரம் மழை ஓய்ந்ததால், ஆட்டத்தை தொடங்கலாமா என  நடுவர்கள் இயான் கெளட், நைஜல் லாங் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் பாக். கேப்டன் சர்பராஸ், பயிற்சியாளர் மிக்கி ஆர்தரும் மைதானத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 5 மணி நேரம் காத்திருந்தும் மழை குறையாததால், மைதானம் ஆடுவதற்கு ஏற்றதாக இல்லாத நிலையில்,  ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்துஇரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி  வழங்கப்பட்டது.

இலங்கை அணி 3 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கும், பாகிஸ்தான் நான்காம் இடத்துக்கும் முன்னேறின.