கிரிக்கெட்: விராட் கோலி புதிய சாதனை!

Must read

கொழும்பு,

லங்கையில் 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் 15ஆயிரம் ரன்களை கடத்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே  தென்னாப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா, 336 போட்டிகளில் 15ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது.

தற்போது விராட் கோலி அவரது சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிகெட்டில், குறைந்த போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களைக் கடந்து அவர்சா இநந்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ரன்களைக் கடந்தபோது அவர் இந்த சாதனையை அவர் எட்டினார்.  3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து, 304வது ஆட்டத்தில் கோலி, 15 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார்.

அதே போல டி20 போட்டியில், மெக்கல்லம் சாதனையை முறியடித்து,1016 ரன்களை கடந்தும் அவர் சாதனைபடைத்துள்ளார்.

மெக்கல்லம் 1006 ரன்களை சேஸிங் மூலம் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை படைத்த விராட் கோலி கிரிக்கெட் அணி வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More articles

Latest article