2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்! மைக் கேட்டிங் நம்பிக்கை

Must read

2028ம் ஆண்டு அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள  ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க முடியும் என்று நம்புவதாக  எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங்  தெரிவித்து உள்ளார்.

தேசிய ஊக்குமருத்து தடை அமைப்பின் விதிமுறைகளுக்குள் பல ஆண்டுகளாக வராத இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), கடந்த மாதம் தேசிய ஊக்குமருத்து தடை அமைப்பின் விதிமுறை களுக்கு ஒத்துக்கொண்டது.

பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுபவர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடைபெறு வது வழக்கம். உலக ஊக்கமருத்து தடை அமைப்பின் விதிகளுக்குள் உள்ள விளையாட்டுக்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகளில் நுழைய முடியும்.

இந்த நிலையில், தற்போது கிரிக்கெட் போட்டியும் ஊக்கமருந்து தடை அமைப்பின் விதிகளுக்குள் வருவதாக அறிவித்து உள்ளதால், 208ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப் படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பது தொடர்பாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து கூறிய மைக் கேட்டிங், நாங்கள் கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கும்படி ஐசிசியுடன் கேட்டுக்கொண்டுள்ளோம். இதற்கு ஐசிசியின் புதிய செயல் அதிகாரி மனு சாஹனி இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றம்  ஏற்பட்டுள்ளதாகவும், வரும் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

“அடுத்த 18 மாதங்கள் நாங்கள் அதை எப்படி செய்வது என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியவர்,  பி.சி.சி.ஐ இப்போது நாடாவின் மருந்து நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது என்றும்,  “இது விளையாட்டு முழுவதுமாக இருப்பதற்கு நீண்ட தூரம் உதவும், இது ஒலிம்பிக்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விளையாட வேண்டும் மற்றும் அனைத்து நாடுகளும் இணங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மகளிர் கிரிக்கெட் சமீபத்தில் 2022 காமன்வெல்த் விளையாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டது என்ற தகவலையும் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய ஐசிசி தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்,  ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி., தீவிரம் காட்டி வருவதாகவும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நிச்சயம் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article