கொல்கத்தா:
வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கிறது. ஆனால், விஐபிக்களுக்கு கடன் கடன்களை அள்ளிக் கொடுக்கிறது. இதன் காரணமாக அவர்கள் வங்கிகளை சூறையாடிவிட்டு தலைமறைவாகி விடுகிறார்கள் என்று மம்தா குற்றம் சாட்டினார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக சாடினார்.
பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை போன்றவை அமல்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடித்து வரும், மத்திய அரசு ஏழை மக்களுக்கு கடன் வழங்க மறுக்கிறது.
விவசாயிகளுக்கும், சுய உதவிக்குழுக்களும், சிறு வர்த்தகர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மக்களின் சேமிப்பு பணம பாதுகாப்பாக இல்லை.
விஐபி வாடிக்கையாளர்கள் வங்கிகளை கொள்ளையடித்து நாட்டை சூறையாடிச் செல்கின்றனர். இவர்களை போன்றவர்கள் பிரதமருக்கு நெருக்கமாக இருக்கின்றனர் என்றும், பணக்காரர்கள் தங்கள் வாங்கிய வங்கி கடன்களைத் திருப்பி செலுத்துவதில்லை என்ற அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக தீவிர விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
ஏற்கனவே விஜய் மல்லையா, போன்றவர்கள் நமது நாட்டு வங்கிகளில் வாங்கிய கோடிகணக்கான கடனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், தற்போது வைர வியாபாரி நிரவ் மோடியும் குடும்பத்துடன் வெளிநாட்டு தப்பியிருப்பது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.