கொல்கத்தா
திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு ஈடானது என கம்யூனிஸ்ட்தலைவர் சூரியகாந்த் மிஸ்ரா கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் பா ஜ க வை எதிர்க்க கம்யூனிஸ்ட் கட்சியினரும் திரிணாமுல் காங்கிரஸும் கூட்டணை அமைக்கப் போவதாக ஆதாரமற்ற செய்திகள் உலவி வருகின்றன. கொல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் 98ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சூரியகாந்த் மிஸ்ரா கலந்துக் கொண்டு உரையாற்றினர்.
அவர் தனது உரையில், “கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பா ஜ கவை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணை வைப்பதை ஆதரிப்பதாக பல செய்திகள் வருகின்றன. ஆனால் தொண்டர்கள் அந்த இரு கட்சியையுமே தவிர்க்க வேண்டும். அந்த இரு கட்சிகளுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான். இரண்டுக்கும் எந்த ஒரு வேற்பாடும் இல்லை. தொண்டர்கள் யாராவது பா ஜ க வை தோற்கடிப்பதற்காக திரிணாமுலுடன் கூட்டணி வைக்கலாம் எனச் சொன்னால் அது தற்கொலைக்கு ஈடானது என்பதை உணர வேண்டும். அதே போல திரிணாமுலை தோற்கடிக்க பா ஜ கவுடன் கூட்டணி என்பதும் அதற்கு ஒப்பானதே.
டார்ஜிலிங்கில் இறந்த சப் இன்ஸ்பெக்ட்ர் அமித்வா மாலிக் சாவுக்கு இந்த மாநில அரசுதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். டார்ஜிலிங் அமைதியைக் குலைத்தது யார்? அதன் மூலம் இந்த அரசு என்ன செய்ய நினைக்கிறது? அங்கு அமைதி வந்து விட்டால் தங்களால் அரசு செய்ய முடியாது என்னும் ஆளும் கட்சியின் எண்ணத்தினால் மட்டுமே தற்போது டார்ஜிலிங் அமைதி குலைந்துள்ளது.” என தெரிவித்தார்.