புதுடெல்லி:
மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம்,டெல்லி மற்றும் புதுச்சேரியை மாநில அந்தஸ்தாக உயர்த்துவது, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
விவசாய தொழிலாளர்களுக்கு தனிச் சட்டம், நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவது போன்ற முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா கூறும்போது, “பிரிவினை, வகுப்புவாதம் மற்றும் பாசிச போக்கை கடைபிடிக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வீழ்த்துவது ஒன்றுதான் எங்கள் லட்சியம்”என்றார்.