சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணுவின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவர் இயற்கையுடன் போராடி வருவதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

101 வயதுடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் உடல்நிலை பிரச்னை காரணமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்து, , தீவிர சிகிச்சைக்குப் பிறகு தான் வீடு திரும்பி இருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 20 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணாத நிலையில், அவருக்கு தேவையா உணவு, நேரடியாக இரைப்பையில் வழங்கப்பட்டு வருகிறது. தொண்டையில் ஒரு அறுவை சிகிச்சை செய்து, நேரடியாக மூச்சுக்குழாயில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (பிப்ரவரி 22ந்தேதி) சிறுநீரகத்தில் உப்பின் அளவு அதிகரித்து இருப்பதும் கூடுதல் சிரமங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது. இருந்தாலும் எங்களால் இயன்ற வரை போராடிக் கொண்டு இருக்கிறோம்” என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பிப்ரவரி 23ந்தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்பட முக்கிய தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்த அவரது உடல்நிலைகுறித்து விசாரித்து வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது-
இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்ல கண்ணுவை பார்த்த பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“தற்போதுள்ள சூழலில் அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து வருகிறது. மருத்துவர்கள் அவரை காக்க போராடுகிறார்கள். ஆனாலும், உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருக்கிறது. இதுதொடர்பான தகவல்களை குடும்பத்தினருக்கும், கட்சி தலைமைக்கும் அவ்வப்போது தெரிவித்தபடி உள்ளனர்.
தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக போராடியவர், இப்போது இயற்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்” என மனமுடைந்து பேசினார்.
[youtube-feed feed=1]