பல்லியா:
பசு திருடியதாக கூறி 2 பேரை மொட்டையிடித்து ஊர்வலம் நடத்தியதாக இந்து அமைப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி. மாநிலம் ராஸ்ரா நகரில் பசுக்களை திருடியதாக உமா ராம் மற்றும் சோனு ஆகியோர் மீது பிரவீன் ஸ்ரீவஸ்தவா என்பவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ராம் என்பவர் போலீசில் புகார் ஒரு அளித்தார். இதில் சம்பவத்தன்று இந்து யுவவாகினி அமைப்பினை சேர்ந்தவர்கள் 2 பசுக்களுடன் வந்து, எங்களுக்கு மொட்டையடித்து, கழுத்தில் டயர்களை கட்டி விட்டு, ‘நாங்கள் பசு திருடர்கள்’ என்ற வாசகம் அடங்கிய அட்டையையும் அணிவித்து ராஸ்ரா நகர் வழியே ஊர்வலமாக இழுத்து சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.