க்னோ

த்திரப் பிரதேசத்தில் 12 மத்திய சிறைகளில் கோசாலைகள் எனப்படும் பசு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உத்திரப் பிரதேசத்தில் பல மாவட்டங்களில் பசுக்கள் ஆதரவற்று தெருவில் லைந்துக் கொண்டு உள்ளன.    அவைகளை வளர்ப்பவர்கள் அனாதரவாக விட்டதன் விளைவாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது.  இதையொட்டி பசுக்களின் பாதுகாப்பு அமைப்பான கோ சேவா ஆயோக் அந்த பசுக்களை பாதுகாக்க உ.பி அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

அந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாஜக தலைமையிலான உத்திரப் பிரதேச அரசு  சிறைகளில் பசு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப் படும் என அறிவித்திருந்தது.    முதல் கட்டமாக இப்போது மாநிலத்தில் உள்ள 12 மத்திய சிறைகளில் பசு பாதுகாப்பு மையம் தொடங்கப் பட்டுள்ளது.    இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.