பாரிஸ்:
பிரான்ஸில் ஒருமாத காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரில் கொரோனா தொற்றின் 3-வது அலை உருவாகியுள்ள நிலையில் பிரான்ஸ் அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆயினும் பாரீஸ் உள்ளிட்ட அதன் முக்கிய பகுதிகளில் பள்ளிகள் மற்றும் புத்தகக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 16 நகரங்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். பிரான்ஸ் கொரோனாவின் மூன்றாம் அலையை சந்தித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
நேற்று ஒரே நாளில் புதிதாக 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு தொடங்கி ஒரு மாத காலத்திற்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.இதனிடையே பிரான்ஸ் ,ஜெர்மனி போன்ற சில நாடுகள் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஐரோப்பிய மருத்துவ ஏஜன்சி அறிவிப்பை அடுத்து தடுப்பூசி செலுத்துவதை தொடங்கியுள்ளன.