பாட்னா: பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பீfகாரிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதே நேரத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டு உள்ளார். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக போனஸ் வழங்கப்படும் என்று அவர் கூறி உள்ளார். கடந்த ஆண்டு ஊரடங்கின் போதும் பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.