பிரேசிலியா: உரிய அனுமதிக்கு பின்னர், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரேசில் அதிபர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிப்பதில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந் நிலையில் பிரேசில் அதிபர் போல்சனரோ, கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளார். இது குறித்து, அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

அறிவியல்பூர்வமான வழிகாட்டுதல்கள், அதிகாரப்பூர்வ ஒப்புதல்கள் வெளி வந்த பின்னர், பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.