டேராடூன்: கொரோனா பரவல் காரணமாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் விவரம் வருமாறு: கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கோட்வார் மற்றும் ஸ்வர்காஷ்ரம் பகுதிகளில் ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு அறிவித்துள்ளது.

அவசர விசாரணை தொடர்பான விண்ணப்பங்களை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வழக்குகளில் விசாரணை மே மாதம் முதல் விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அம்மாநிலத்தில் ஒரேநாளில் 81 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.