லண்டன்:
பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் இதுகுறித்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் பிரிட்டனில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஓய்ந்து உள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஊரடங்கைத் தளர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் ஊரடங்கைத் தளர்த்துவதால் மூன்றாம் அலையில் மேலும் பலர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மரணம் அடையவும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர். வரப்போகும் மூன்றாம் அலையை அடுத்து தற்போது பொதுமக்கள் மற்றும் அரசு ஆகியவை விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். பிரிட்டனில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பு மருந்து 2 டேஸ் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில் மூன்றாம் அலை தாக்கத்தின்போது அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.