ஜெனிவா: 133 நாடுகளுக்கு கொரோனா பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 3.4 கோடி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது. இந்நிலையில், 133 நாடுகளுக்குக் கொரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை இலவசமாக வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறி இருப்பதாவது: அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் கொரோனாவுக்கு 2 வகையான மருத்துவப் பரிசோதனைகளை செய்கின்றன.
பிசிஆர் சோதனை போன்று இல்லாமல், அதிவிரைவு ரேபிட் கிட்கள், 15 முதல் 30 நிமிடங்களில் முடிவுகள் வெளியாகி விடும். இதன் மூலம், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் அடையாளம் கண்டறிய முடியும்.
ஆகையால், பொருளாதாரத்தில் பின்தங்கிய, 133 நாடுகளுக்கு இந்த கொரோனா பரிசோதனை உபகரணங்கள், கருவிகளை வழங்க உள்ளோம். 6 மாதங்களுக்கு இவற்றை முழுமையாக வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.