பாட்னா: பீகாரில் செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர், பலியாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதார துறை தெரிவித்து வருகிறது. ஆனால், நோய் தொற்றை கட்டுக்குள் வைக்க ஒவ்வொரு மாநிலங்களிலும் நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கு மற்றும் தளர்வுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

பீகார் மாநிலத்திலும் கொரோனாவை குறைக்க, அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளது. இந் நிலையில், நோய் பாதிப்பு குறித்த உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பீகாரில் கொரோனா பாதிப்பு தொடர்பாக செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூலை 16ம் தேதி முதல் 31 வரையும் பின்பு, ஆகஸ்ட் 16 வரையும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 30ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மாநிலம் முழுவதும் செப்டம்பர் 6 வரை நடைமுறையில் இருக்கும். மாநிலத்தில் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது, குறிப்பிடத்தக்கது.