நியூயார்க்: புதிய ஆய்வின்படி, உடலில் அணிந்து ஸ்மார்ட்வாட்ச்(கடிகாரம்) போன்ற பொருட்களின் மூலம், கொரோனா தொற்றை முன்கூட்டியே அறிய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, இத்தகைய உபகரணங்களால் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய முடியும் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், கொரோனா தொற்றியவருக்கு, அதன் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு 9 நாட்களுக்கு முன்பாகவேகூட, இந்த உபகரணங்களின் மூலம் தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 5300 பேரில் கண்டறியப்பட்ட 32 கொரோனா தொற்றிய நபர்களின் தரவுகள் அலசப்பட்டதன் விளைவாக இந்த புதிய விஷயம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கின்றனர் அவர்கள்.
அந்த 32 நபர்களில், 26 நபர்களின் இதயத் துடிப்பு, அன்றாட நடவடிக்கைகள் மற்றும் தூக்கம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டதை கண்டறிந்தனர் ஆய்வாளர்கள்.