டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. 154 நாட்களுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவில் தினசரி பாதிப்பு  25,166 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 146 நாட்களில் வெகுவாக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,  கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக மேலும்  25,166 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாகவும், இது கடந்த 154 நாட்களில் மிகவும் குறைவு என்றும்தெரிவித்து உள்ளது. இதனால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 3,22,50,679 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 36,830 குணமடைந்துள்ளதுடன், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  3,14,48,754 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் 97.51% ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 437 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், இதுவரை கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 4,32,079 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 3,69,846 ஆக குறைந்துள்ளது. கடந்த 146 நாட்களில் இது மிகக்குறைந்தது.

நாடு முழுவதும் இதுவரை 55,47,30,609 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 88,13,919 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.