டெல்லி: ஆகஸ்டு 31 வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒட்டு மொத்த பாதிப்பு என்பது 16 லட்சத்தை கடந்துவிட்டது. கொரோனா எதிரொலியாக கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ஆகஸ்டு 31ம் தேதி வரை  சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும், சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.