டெல்லி: நாட்டில் 62% கொரோனா நோயாளிகள் தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 29.7 லட்சத்திற்கும் அதிகமான உள்ளது. சிகிச்சை பெறுவோரை விட 3.5 மடங்கு அதிகமாகும்.
24 மணிநேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று 68,584 பேர் குணம் பெற்றனர். இதுவரை இல்லாத பதிவாககும். 4.5 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது, மொத்த எண்ணிக்கையில் 62% ஆக உள்ளது என்றார்.