திருவனந்தபுரம்
கொரோனா வைரஸ் மனிதரிடமிருந்து குரங்குகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளதாக கேரள முதல்வர் எச்சரித்துள்ளார்.
மனித இனத்தை முடக்கிப் போட்டுள்ள COVID-19 வைரஸ் தற்போது விலங்குகளையும் தாக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் புரோங்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“மனிதரிடமிருந்து குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது. எனவே குரங்குகளுக்கு அருகில் நின்று உணவு தருவதை மக்கள் அறவே தவிர்க்க வேண்டும்.
மேலும் காடுகளுக்கு அருகில் உள்ள மக்கள் சிலர், தங்களுக்கு குரங்குக் காய்ச்சல் வருவதாகத் தெரிவித்துள்ளனர். அந்நோய்க்குரிய அறிகுறிகள் வெளிப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரும்பு, சளி உள்ளிட்ட நீர்த் திவலைகள் வழியாக மட்டுமின்றி மலக் கழிவுகள் மூலமாகவும் கொரோனா பரவும் என்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.