புதுடெல்லி:
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் தொலைபேசிய பேசிய பின்னர், புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளவை வெளியிடுமாறு, பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர்- பிரதமர் மோடி விடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, புதுடெல்லி இந்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, மோடி- டிரம்பி இடையிலான தொலைபேசி அழைப்புக்கு முன்னர், கொரோவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஏற்று, மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது.
கொரோனா வைரஸ் வெடிப்பை சமாளிப்பது குறித்து நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை காலையில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மருந்துத் தொழிலுக்கு, அமெரிக்க சந்தைகளுக்கான அணுகலைப் பெறுவதற்கான வாய்ப்பாக இது இருக்கலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன, ஆனால் சொந்த நாட்டுக்கான தேவையை கணக்கில் கொண்ட பின்னரே அமெரிக்காவின் கோரிகை குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிகிறது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் கொரோனாக்கு எதிரான போராட்டத்தின் போது முக்கியமானமருந்தாக கருதப்ப்டுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பலர் இந்த மருந்தை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினேன். இந்த பேச்சுவார்த்தையின் போது கொரோனா தடுப்பு மருந்து குறித்து இருவரும் ஆலோசனை செய்தோம் என்றார்.