ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் ஏவுதளத்தில் இன்று இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட். இதற்கான 26 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.
புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-1 செயற்கைக்கோளை உள்பட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதனப்டி இன்று மாலை 3.02 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படஉள்ளது.
ராக்கெட் ஏவுதலின் இறுதிக்கட்ட பணிகளுக்கான 26 மணி நேர கவுன்ட்டவுன்நேற்று மதியம் 1.02 மணிக்கு தொடங்கியது. அதன் பின்னர் திட, திரவ எரிபொருள் நிரப்புதல்உள்ளிட்ட பணிகளை விஞ்ஞானிகள் குழு தொடங்கியது.
இதில் செலுத்தப்பட முதன்மை செயற்கைக்கோளான இஓஎஸ், விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள்கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு பயன்படும் என்றும், இதிலுள்ள சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் படங்களை எடுக்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
அத்துடன், லிதுவேனியாவின் ஒரு செயற்கைக்கோள், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தலா 4 என மொத்தம்9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்படுகின்றன.
கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமா, இன்று ராக்கெட் ஏவுதலை பார்வையாளர்கள் நேரடியாக காண அனுமதியில்லை என்றும், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.isro.gov.in/) மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பு செய்யப் படும் என்றும் இஸ்ரோ அறிவித்து உள்ளது.
இதைத் தொடர்ந்து டிசம்பரில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.