சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டு, ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, துணைவேந்தர் சூரப்பா மீது தமிழகஅரசு நீதிபதி கலைவாணன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. தற்போது, அதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
அரசுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்த சூரப்பா மீது தமிழகஅரசு அதிருப்தி கூறி வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், சூரப்பா மீது, பணி நியமனத்தில் ரூ.280 கோடி அளவில் ஊழல் புகார்கள் எழுந்தது. இதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது.
அரசின் அறிவிப்புக்கு சூரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். தன் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்தார். இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலாலும், சூரப்பாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சூரப்பா மீதான முறைகேடு நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளது என தெரிவித்தது. இந்த நிலையில், கலையரசன் குழுவுக்கு உயர்கல்வித்துறை மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் பணிகளும் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.