டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை பதவி விலகக் கோரி அந்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மீது அந்நாட்டடு பெருமுதலாளிகளிடம் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. அதுபோல கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் திறமையாக கையாலாகாமல் இருந்ததால்,  அதிக கொரோனா  உயிரிழப்புகளை கொண்டுள்ளதை கண்டித்தும் மக்கள் போராட்டம் நடைபெறுகிறது.

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தமப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முறையாக ஆணையம் அமைத்து விசாரணை நடத்தக்கோரி இஸ்ரேலியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதுபோல கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்க தவறியதாகவும் நெதன்யாகு அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் 3வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் கொரோனா உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 5,094,979 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 1,50,506 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,470,165 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து  இருந்தால், தொற்றால் 4,74,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பென்ஜமின் நெதன்யாகு பிரதமர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கூறி அங்கு மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.  ஜெருசலேமில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வமான இல்லத்தையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மத்திய டெல் அவிவில் உள்ள ஹபிமா சதுக்கத்தில் நடந்த மிகப்பெரிய கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கறுப்புக் கொடிகள், பதாகைகள் ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மீது முதலாளிகளிடம் கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.