டில்லி:

லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பண மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வரு மான, லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்த போது,

ஓட்டல்களுக்கு உரிமம் வழங்கியதில், முறைகேடு செய்ததாக,   சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.  இந்த உரிமம் வழங்கியதற்கு கைமாறாக, 3 ஏக்கர் நிலத்தை அவரும், அவரது குடும்பத்தினரும்  பெற்றதாகவும் குற்றம் சாட்டியது.

 

இந்த முறைகேடு தொடர்பாக, லாலு, அவரது மகன், தேஜஸ்வியின் வீடுகள் உள்ளிட்ட, 12 இடங்களில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் லாலு உள்ளிட்டோர் மீது  மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து பீகார் துணை முதல்வராக இருந்த லாலுவின் மகன்  தேஜஸ்வியை, பதவி விலகுமாறு பீகார் முதல்வர் நிதிஷ் வலியுறுத்தினார். இதற்கு தேஜஸ்வி மறுத்தார்.

இதையடுத்து முதல்வர் நிதிஷ், நேற்று ராஜினாமா செய்து, இன்று பா.ஜ., ஆதரவுடன் முதல்வராக பதவியேற்று கொண்டார்.

 

இந்த நிலையில், இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.