ஜெனீவா: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கொரோனா வைரசை பரவாமல் இருக்கும் வண்ணம் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு ஆதரித்து வருகிறது. அறுவை சிகிச்சை முகக்கவசங்மூடிகள் மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும், அதே நேரத்தில் பொதுமக்கள் முக்கியமாக துணி அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட முக உறைகளை பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக்கேல் ரியான் கூறி இருப்பதாவது: முகக்கவசங்கள் அணிவதால் பாதிக்கப்பட்ட நபர்கள், மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விகிதத்தை குறைக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கலாம்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் துணி முகக்கவசங்களை பயன்படுத்துவது கொரோனா பரவல் விகிதத்தை குறைக்கலாம். அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் N 95 வகை முகக்கவசங்கள் மருத்துவத்துறைக்கானது. அவற்றை பயன்படுத்துவதற்கு உரிய  முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.