கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே  கொரோனா பரவ தொடங்கி விட்டது.

சமீபத்திய எண்ணிக்கையின் படி, கொரோனா பாதிப்பு ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 700 ஆக இருந்து வருகிறது.  கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை உலகளவில் அதிவேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து, இந்த நோய் தடுப்புக்கான தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கி விட்டது. இந்த தடுப்பு மருந்து தயாராக இன்னும் 12 முதல் 16 மாதங்கள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 110 ஆராய்ச்சியாளர்கள் குழுக்கள், கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஒரு படி முன்னேறி இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளனர். மற்றவர்கள், கொரோனா பரவலை தடுக்க  மாற்றுவழிகளைக் தேடி ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள தற்போதைய முன்னேற்றம் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

பாரத் பயோடெக் தடுப்பூசி ஆய்வு

பாரத் பயோடெக் இண்டர்நேசனல் லிமிடெட் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து நடத்தி வரும் ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதகாவும், இந்த ஆராய்சி அடுத்த மாதம் முடிவடையும்  வகையில் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்வது குறித்து இந்த நிறுவனம் எந்த தகவலை வெளியிடவில்லை. இருப்பினும், இந்த தடுப்பூசி நல்ல பலனை கொடுக்கும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏன்னென்றால் இந்த தடுப்பு மருந்து மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் சிஇஓ டாக்டர் கிருஷ்ண மோகன் எல்லா தெரிவிக்கையில், தடுப்பூசி தயாரிக்கும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படுள்ளது. அடுத்த மாதம் மிகவும் முக்கியமான கால கட்டமாகும். நான் அறிவியல் ஆராய்சியாளர், நான் அறிவியலை முழுமையாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாக வேறு எந்த நிறுவனமும் தெரிவிக்காத நிலையில், முதல் நிறுவனமாக பாரத் பயோடெக் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மருந்து எல்லா இடங்களிலும் கிடைக்க 6 முதல் 12 மாதங்கள் ஆகும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மற்ற தடுப்பு மருந்துகள் சோதனைகளும் நடைபெறுகிறது?

இதுதவிர, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏழு மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் சில மருந்துகள் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்யும் நிலையில் உள்ளது. இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மருத்துவ சோதனையில் ஈடுபட்டுள்ள  இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா  ஒன்றாகும்.
மார்டனா தடுப்பு மருந்து இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது
அமெரிக்காவை மையமாக கொண்ட மார்டனா தெராபேட்டிக்ஸ் இன்னோவேட்டிவ் நிறுவனம் உருவாக்கியுள்ள ஆர் என் ஏ -1273 புரோட்டோ டைப்கள் உலகளவில் அதிகளவில் கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்து தயாரிப்பு குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்தை, மருத்து சோதனைகளுக்கு பின்னர், தற்போது நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்யும் அடுத்தக் கட்டத்தை எட்டி விடட்தாக தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டமாக 600-க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மார்டனா தடுப்பூசி பாதுகாப்பானதா? 

இந்த மருந்தின் முதற்கட்ட சோதனையின் போது சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி,  இந்த மருந்து வெற்றிகரமாக செயல்படுவதாகவும், அதிவிரைவாக நோயாளிகளின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த மருந்து சிறப்பாக செயல்படுவதால், கொரோனா பரவலை தடுக்க, இந்த மருந்தை பெரியளவில் தயாரிக்க மார்டனா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பக்க விளைவுகள் குறித்த ஆய்வு 

கடந்த வாரம் இந்த தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இருந்தபோதிலும், இந்த தடுப்பூசியை நோயாளிகளுக்கு கொடுப்பதால் உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.  இந்த தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற நோயாளிகளில் ஒருவர், இரண்டாவது  சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவருக்கு  சளி, குமட்டல் மற்றும்  தசை வலி  ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவுகள், பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு செய்ய ஆய்வாளர்களை தூண்டியுள்ளது.
ரஷ்யாவும் தடுப்பு மருந்து சோதனையை தொடங்கியுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.  உலகிலேயே இந்த மருந்தை தயாரித்த  முதல் நாடு என்ற பெருமையை பெற்றிட ரஷ்யா முடிவு செய்துள்ளது.  ரஷ்யாவின் அவிபேர் நிறுவனம், ஜூன் 11-ஆம் தேதி முதல் தான் தயாரித்த தடுப்பு மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி மற்றொரு மருந்தை  சைபீரியாவின் விக்டோர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடன் இணைத்து ரஷ்யா தயாரித்துள்ளது.  இந்த மருந்தை விலங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் மருத்துவ ரீதியான சோதனைகள் தொடங்கப்பட உள்ள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினோவோக்  99 % செயல்த்திறன் கொண்ட மருந்தை தயாரிக்கிறது

சீனாவைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமான சினோவோக் பயோடெக் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவோக் என்று அழைக்கப்படும் இந்த மருந்து கொரோனா தடுப்பில், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த மருந்து 99 சதவிகிதம் கொரோனா பரவலை தடுக்க்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

போட்டி நிறுவனங்களைப் போன்று சினோவோக் நிறுவனமும், தனது மருந்துகளை இரண்டாம் கட்டமாக சோதனை செய்துள்ளது. இந்த மருந்தை குரங்குகளுக்கு கொடுத்து  சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை நல்ல முடிவுகளை எட்டினால், இங்கிலாந்தின் சில பகுதிகளில் மூன்றாம் கட்ட சோதனையை துவக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சோதனைக்கு தேவையான நிதிகள் ஏற்கனவே பெறப்பட்டு விட்டதால், இந்த மருந்துகளுக்கான பாதுகாப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
சீனாவில் அதிக அளவிலான  தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் துவக்கம் 
சீனாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்யும் நிலையை எட்டியுள்ளன. இதுமட்டுமின்றி பீஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிக்கல் புராடைக்ட்ஸ் மற்றும் சீனா தேசிய பயோடெக் குழு ஆகிய நிறுவனங்கள் இரண்டாம் கட்ட சோதனைக்கு தேவையான அனுமதியை பெற்று விட்டன. இதனால், இந்த மருந்துகள் இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த தடுப்பூசி, கொரோனா வைரசை கொல்லும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசியை போட்டு கொண்ட உடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரித்து விடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கேன்சின்னோ தடுப்பூசியின் நிலை
சீனாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள கேன்சின்னோ தடுப்பூசி, முதல் முறையாக இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.  இந்த தடுப்பூசியின் முதல் கட்ட முடிவுகள் சிறந்த பலனை கொடுத்துள்ளது. இந்த மருந்தை ஒருமுறை எடுத்துக் கொண்ட நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதனால் அந்த நோயாளிகளுக்கு 28 நாட்களில் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இரண்டே வாரங்களில் கிடைத்து விடுகிறது.
பதஞ்சலி நிறுவனம் தயாரிக்க்கும் ஆயுர்வேத மருந்து

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் பாரம்பரிய முறைகளும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது. யோகா குரு ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி குழுமம் ஏற்கன்வே இந்த பணிகளை தொடங்கி விட்டது. இந்த நிறுவனம் ஆயுர்வேத முறைப்படி, கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளது. இந்த மருந்தை சோதனைக்கான அனுமதியை பெற்றது. இதையடுத்து இந்த மருந்துகளுக்கான சோதனையை தொடங்கி விட்டது. இந்த மருந்துக்கான சோதனை இந்தூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மூலிகையில் கொரோனா தடுப்பு மருந்து 
கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ஆயுர்வேத மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வெறுமனே உருவாக்குவதற்கு பதிலாக, கொரோனாக்கு ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரணுக்களில் வைரஸ் நுழைவதைக் கட்டுப்படுத்தவோ அல்லது அடக்கவோ கூடிய 1000 க்கும் மேற்பட்ட பைட்டோ கெமிக்கல்களை (அஸ்வகந்தா, கிலோய், துளசி போன்ற வைரஸ் எதிர்ப்பு பண்புகள் கொண்டவை உட்பட) அவை சோதனை செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவும் கொரோனா  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை வெற்றிகரமாக சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.