லக்னோ:

கொரோனா பாதிக்கப்பட்ட, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இஸ்லாமியி அமைப்பைச் சேர்ந்த சிலர், சுகாதாரத்துறை ஊழியர்களிடம் ஆபாசமான முறையில் நடந்துகொண்டதால், அவர்கள்மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்ச மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா கட்டுங்கள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற  தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மத கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

உ.பி.யில், தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மத கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை ஆசாமாக பேசியும், அருவருக்கக்தக்க வகையில் நடந்துகொள்வதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள்மீது  தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த உத்தரபிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.