மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் உருவான சீனாவில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரசால் மக்கள் பலியாவது பல மடங்கு அதிகரித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தது. ஸ்பெயினில் 1500 பேர் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகினர். இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5700 என உயர்ந்துள்ளது.

15,000 க்கும் அதிகமானோர் என்ற விகிதத்தில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஸ்பெயின் ஆகும். இதையடுத்து, தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி நிகழ்ந்தால், அது வரலாற்றில் 2வது முறையாகும். கொரோனா தொற்றின் மையமாக ஐரோப்பா இப்போது இருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கூறி உள்ளது.