டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை 6,761 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 896 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 37 பேர் பலியாகி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு, 503 பேர் உடல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதே வேளையில் பலி எண்ணிக்கை 206 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் 3வது நிலைக்கு மாறும் வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள மத்திய மாநில அரசுகள், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகவு உள்ளதாகவும், பலி எண்ணிக்கையும் 37  ஏற்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு  திடீரென உயர்ந்துள்ளது சுகாதாரத்துறையினிரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 1,364, தமிழகம் – 834, டெல்லி – 720, ராஜஸ்தான் – 463 பேருக்கு கொரோனா பாதிப்பு. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லிருந்து 8ஆக உயர்வு டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று மட்டும் 16, 002  பேருக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 0.2% மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் தொற்று விகிதம் அதிகமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.