புது டெல்லி:

டந்த மாதம் டெல்லியில் மாநாட்டை 7,600 இந்தியர்களும், 1,300 வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.


டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எப்படியிருந்தாலும் தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களில் அதிகமான உறுப்பினர்கள் அடையாளம் காணப்படுவதால், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் 1 ஆம் தேதி வரை உள்துறை அமைச்சகத்தால் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,051 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தப்லீஜி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 7,688 உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவர்களை எந்த சிரமமுன்றி அடையாள கண்டுபிடித்துள்ளோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று மாநாட்டில் பங்கேற்றவர்களையும், அவர்களுடன் தொடர்பு கொண்டிருப்பவர்களையும் அடையாளம் கானும் பணி தொடர்ந்து நடக்கும் என்று பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில அரசுகள் மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்புடையதாக நாடு முழுவதும் 400 பேர் அடையாளம் காணப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில் பெரும்பாலனாவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவலில், தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் இதுவரை 190 பேருக்கும், ஆந்திராவில் 71 பேருக்கும், டெல்லியில் 53 பேருக்கும், தெலுங்கானாவில் 28 பேருக்கும், அசாமில் 13 பேருக்கும், மகாராஷ்டிராவில் 12 பேருக்கும், அந்தமான் 10 பேருக்கும், ஜம்மு-காஷ்மீரில் 6 பேருக்கும், புதுச்சேரி மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் தலா ஒருவர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிப்டப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மாதம் நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பல நாட்களில் பிரார்த்தனை அமர்வுகள் மற்றும் சொற்பொழிவுகளிலும் பங்கேற்று உள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கூட்டம் முடிந்ததும், மற்றவர்கள் நகரத்தை விட்டு வெளியேறியதும் ஆயிரக்கணக்கான மக்கள் மார்க்காஸ் அல்லது மையத்தின் தங்குமிடங்களுக்குள் சிக்கித் தவித்ததாக தப்லிகி ஜமாஅத் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை 36 மணி நேர டெல்லி மாநாடு முடிவடைந்ததும், 2,335 பேர் தப்லிகி மையம் மற்றும் அதன் மசூதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.