டெல்லி:

லக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வெளிநாடுகளுக்கு அனுப்பி உதவி செய்த பிரதமர் மோடிக்கு  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர், பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ நன்றி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்து உள்ளார்.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்து பெரும் பங்காற்றி வருகிறது. இந்த மருந்து இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  மருந்தை தங்கள் நாடுகளுக்கு அனுப்பி உதவ வேண்டும் என்று அமெரிக்கா உள்பட நட்பு நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருந்தன.

இதைத்தொடர்ந்து, இந்தியா அமெரிக்கா, இஸ்ரேல், பிரேசில் உள்பட பல நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோராகுயின் மருந்து அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேலுக்கும் மருந்து அனுப்பி வைத்தது.

இதற்கு பிரதமர் மோடிக்கு  நெதன்யாகு நன்றி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,

“நன்றி, இஸ்ரேலுக்கு குளோரோகுயினை அனுப்பியதற்காக என் பிரியமான நண்பர் இந்தியாவின் பிரதம மந்திரி நரேந்திரமோடிக்கு நன்றி,  இஸ்ரேல் குடிமக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்கிறோம்!” என்று தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  ஐந்து டன் அளவில், குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளுக்கான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.