கர்நாடகா:

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் சோதனை செய்யப்பட்ட 25 வயதான மென்பொருள் பொறியாளருடன் தொடர்பு கொண்ட நபர்களை கர்நாடக சுகாதாரத் துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது.

 

இதுகுறித்து தெலுங்கானா சுகாதார அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் தெரிவித்ததாவது:

பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தின் ஊழியரான இந்த நபர் பணி காரணமாக துபாய் சென்று ஹாங்காங்கைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்களுடன் பணியாற்றியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி பெங்களூருக்குத் திரும்பிய அவர், பிப்ரவரி 22 அன்று ஹைதராபாத்திற்குச் செல்வதற்கு முன், ஓரிரு நாட்கள் பெங்களூரிலேயே வேலை செய்து வந்துள்ளர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவில் இவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்களிடம் தனக்கு, ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சல் அடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத்தால் நடத்தப்படும் காந்தி மருத்துவமனையில் அவருக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்க்கு ஆளான அந்த சாப்ட்வேர் இன்ஜினியரின் பெயர் குறித்த விபரங்களை கர்நாடக சுகாதார துறை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.

இதுகுறித்து பேசிய பேசிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கான கண்கானிப்பு குழுவின் தலைவர் பிரகாஷ் குமார் பேசுகையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவரை தொடுவதால் நோய் தொற்று பரவ வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெலுங்கானா சுகாதார துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

கொரோனா வைரஸ் பரவது கட்டுக்குள் உள்ளது என்றும், நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.