மும்பை:
கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மும்பையின் தாராவி குடிசை பகுதி மாறியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாக உள்ள தாராவி பகுதியில் கொரோனா பரவியுள்ளது. கொரோனா பாதிப்பால் தாராவி பகுதியை சேர்ந்த 56-வயதான ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவர் வசித்த கட்டிடம் சீல் வைக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர் தப்லிகி ஜமாஅத்தைச் சேர்ந்த யாருடனும் தொடர்பு கொண்டாரா என்று பிரஹன் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) மற்றும் மும்பை காவல்துறை சோதனை செய்து வருகின்றனர். அவர் வெளிநாட்டு பயண சென்று வந்தவராக தெரிய வில்லை.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் நியாதி தாக்கர் கூறுகையில், “அந்த நபருக்கு அதே பகுதியில் மற்றொரு வீடு இருந்தது, தப்லிகி ஜமாஅத்தின் சில உறுப்பினர்கள் அங்கே தங்கியிருந்ததாகத் தெரிகிறது. ஜமாத்தின் வேறு சில உறுப்பினர்களும் உள்ளூர் மசூதியில் தங்கியிருந்தனர். இதை நாங்கள் சரி பார்த்து வருகிறோம்” என்றார்.
இந்நிலையில், தாராவில் சேர்ந்த மற்றொருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வோக்ஹார்ட் மருத்துவமனையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும், அப்பகுதியில் வசிப்பவரும் அந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுள்ளது. 35 வயதான அவரது உடல் நிலை தனியார் ஆய்வகத்தால் சோதிக்கப்பட்டது. இதையடுதது அவர் ரஹேஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். இதுமட்டுமின்றி பல சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர். மேலும் இரண்டு செவிலியர்கள் கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது.
இது தவிர, வொர்லியைச் சேர்ந்த 52 வயதான கன்சர்வேன்சி தொழிலாளிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் தொடர்புடைய 23 சக ஊழியர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
”அந்த நபருக்கு வொர்லி அல்லது தாராவியில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது ” என்று ஜி வடக்கு வார்டின் உதவி நகராட்சி ஆணையர் கிரண் திகாவ்கர் கூறினார்.
சிவசேனா கார்ப்பரேட்டரும் வார்டு கவுன்சில் தலைவருமான வசந்த் நகாஷே கூறுகையில், கொரோனா தடுப்புகாக அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். ஆனால் மக்கள் இன்னும் ஊரடங்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. பலர் இன்னும் தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர். நாங்கள் கண்காணிப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், இங்கு வசிக்கும் பெரும்பாலோர் தினசரி கூலித் தொழிலாளர்களாக இருப்பதாலும், அவர்களது வாழ்வாதாரத்திற்கான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட வேண்டும் ” என்று கோரிக்கை விடுத்தார்.
தாராவி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், “ கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக குடியிருப்பு பகுதிகளில், மருத்துவ சோதனை செய்வது, கிருமி நாசினி தெளிப்பது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
தாராவியில் வசிக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள் கொரோனா வைரஸின் போது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர், இதனால் இங்கு வசிப்பவர்களில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேஷன் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். கடைக்கு வெளியே கூட்டம் வராமல் இருக்க ஒவ்வொரு குடும்பத்தினரும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள அறிவுறுத்துமாறு ரேஷன் கடை மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இப்பகுதியில் ஆறு சமூக சமையலறைகள் செயல்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் நேற்று முதல் ஏழு புதிய சமையலறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க அதிகாரிகள் விரும்பினால், சுத்தமான குடிநீர், பால், மருந்துகள், காய்கறிகள், மளிகை பொருட்களை அவர்களது வீட்டு வாசலிலுக்கே கொண்டு சென்று வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
தாராவியில் பயிற்சி பெற்ற தனியார் டாக்டர் விகாஸ் ஓஸ்வால் பேசுகையில், “தாராவிவில் கொரோனா வைரஸ் பரவியால் அது டைம்பாம்ப் போன்றது. கொரோனா வைரஸின் அறிகுறியற்ற நோயாளிகள் 14 நாட்களுக்கு தாமதமாக வெளிப்படுத்தப்பட மாட்டார்கள். அதனால்தான் ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மஹிம்-தரவி மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஓஸ்வால், மருத்துவர்களுக்கு தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் இல்லாததால், எங்களால் முறையாக சிகிச்சை கொடுக்க முடியவில்லை என்று கூறினார். இதனால், அனைத்து நோயாளிகளும் அங்கீகரிக்கப்பட்ட கிளினிக்குகளுக்குச் செல்ல வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அவர்களுக்கு அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.