உத்திர பிரதேசம்:
உத்திர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஹிந்து மக்களின் வாக்குகளை கவரும் நோக்கில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும் ராம நவமி மோளாவை நடத்த அயோத்தி முடிவு செய்துள்ளது.
இந்த மேளாவை பங்கேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் அயோத்தியில் நடக்கும் இந்த மேளாவில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இந்த மேளா மார்ச் 25-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி வரைநடக்க உள்ளது.
ராம் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலயில், இந்த மேளாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களை கவர்ந்திழுக்கும்.
இந்நிலையில், அயோத்தியாவின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவிக்கயில், கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் இந்த மேளாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த மேளா நடந்தால் ஏராளமான மக்களை நாம் சோதனை செய்ய வேண்டியிருக்கும். என்று தெரிவித்தார்.
இருந்த போதும், மாநில நிர்வாகம், இந்த மேளா திட்டமிட்டபடி நடைபெறும் யென்ரு தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, இந்த மேளாவுக்கு வரும் மக்கள் என்னென்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது தெளிவாக வகுத்துள்ளோம் என்றார். இந்த மேளாவுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து கொண்டே மேளாவில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மேளாவை, தூர்தர்சனில் ஒளிப்பரப்பு செய்யவும் முடிவு செய்ய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான பக்தர்களை கவரவும் திட்டமிட்டுள்ளது.