சென்னை:

தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கருதப் படுவார்கள், மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க  நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள்  அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில்  உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும் அவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.