டெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2093 ஆக உய்ரந்துள்ளது. அதுபோல பலி எண்ணிக்கையும் 58 ஆக அதிகரித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 437 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தனது பேயாட்டத்தை தொடங்கி உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று 3வது கட்டத்தில் உள்ள நிலையில், அதன் தாக்கம் வீரியத்துடன் காணப்படுகிறது.
கடந்த இரு நாட்களாக நோய் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய நிலையில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2093 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையிம் 58 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 12 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்துள்ளது. 151 பேர் குணமடைந்துள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 1764 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.