புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக, சிறைக் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், பரோலும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மாலிநத்தில் உள்ள 4 சிறைச்சாலைகளில், அடைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை சந்தித்க உறவினர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பரோலும் ரத்தாகியுள்ளது.

இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.  வரும் 31-ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாஹே பகுதியில் வயதான பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மதுபான பார்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.