டில்லி

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,72,.088 ஆகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  33,976 ஆகி உள்ளது.

சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் 183 நாடுகளில் பரவி உள்ளது.  நாளுக்கு நாள் இதனால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கையும் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இதனால் உலக மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

உலக அளவில் இன்று அதிகாலை கணக்குப்படி 7,22,088 பேர் பாதிக்கப்பட்டு அதில் 1,51,766 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இந்த வைரஸ் 33,976 பேரை பலி வாங்கி உள்ளது. சுமார் 26,680 பேர் அபாய நிலையில் உள்ளனர்.

பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அதிக அளவில் அமெரிக்காவில் உள்ளனர்.  அங்கு 1,42,079 பேர் பாதிக்கப்பட்டு 2484 பேர் உயிர் இழந்துள்ளனர்.  பாதிப்பில் இரண்டாம் இடத்திலும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையில் முதல் இடத்திலும் இத்தாலி உள்ளது இங்கு 97,889 பேர் பாதிக்கப்பட்டு 10,779 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் 80,110 பேர் பாதிக்கப்பட்டு 6,803 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இந்த வைரஸ் தொற்று தொடங்கிய சீனாவில் 81,740 பேர் பாதிக்கப்பட்டு 3,304 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதையடுத்து ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வருகின்றன.

இந்தியாவில் 1024 பேர் பாதிக்கப்பட்டு 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.